மே 31, ஜூன் 4, 5ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு
Share
நாளை மறுதினம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் எதிர்வரும் ஜீன் 4 வியாழன், மற்றும் ஜூன் 5 வெள்ளி ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜூன் 06 சனிக்கிழமை வரையிலும் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும்.
மே 31 ஞாயிறு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஜூன் 1 திங்கள் முதல் ஜூன் 3 புதன் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஜூன் 4 வியாழன் மற்றும் ஜூன் 5 வெள்ளி ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஜூன் 06 சனி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.