Type to search

Headlines

முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த சிறிகாந்தாவிடம் பொலிஸார் விசாரணை

Share

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா விடம் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப் பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீத வான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, தமிழ்த் தேசியம் சார்ந்த பத்து அரசியல் கட்சிகள் ஒன்று கூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.

இதன்போது எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா அறிவித்தார்.

இந்த நிலையிலேயே ஊடக சந்திப்பைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link