முழங்காலில் அமர்த்தி தாக்கிய இராணுவம்
Share
பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை மருதனார்மடத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று மாலை மருதனார் மட சந்திக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இரு நபர்கள் தமக்குள் முரண்பட்டுள்ளனர்.
இருவருக்கு இடையில் வாக்கு வாதம் கைகலப்பாக மாறிய போது அருகில் இருந்த பொலிஸ் காவல ரனில் உள்ள பொலிஸார் இருவரையும் சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர்.
அப்போது குறித்த நபர்கள் இருவரும் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். அதை அவதானித்த இராணுவத்தினர் இரு நபர்களை யும் அழைத்து சரமாரியாக தாக்கி யுள்ளனர்.
பின்னர் முழங்காலில் அமர்த்தி வைத்திருந்த பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.