முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த இளைஞன் மரணம்
Share
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாங்குளம் – துணுக்காய் வீதியைச் சேர்ந்த, 37 வயதுடைய இரகுநாதன் கௌரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
காட்டு விலங்குகளை வேட்டையாடு வதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் துப்பாக்கியினால் தனக்குத் தானே வெடி வைத்து நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.