Type to search

Headlines

முகநூல் காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் மீது தாக்குதல்

Share

முகநூல் காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞரை வழி மறித்து தாக்குதல் நடத்தியகும் பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர்.

கொக்குவில் பொற்பதிப்பகுதியில் நேற்று நடந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் முகநூலில் ஒரு பெண்ணுடன் தொட ர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் இரு வரும் யாழில் உள்ள கிறீம் கவுஸ் ஒன் றில் சந்திப்பதாகப் பேசிக் கொண்டுள்ளனர்.

இதன்படி, குறித்த இருவரும் பேசி வைத்தபடி நேரத்திற்கு அங்கு வந்துள்ளனர். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை.

இந்நிலையில், அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும் என்றும் அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கிளில் இழுத்து ஏற்றியுள்ளனர்.

அங்கிருந்து கொக்குவில் பொற்பதி வீதிக்கு வந்த அந்தக் கும்பல், அங்குள்ள பிள்ளை யார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர்.

அத்துடன் அவரிடம் இருந்த கைத் தொலைபேசி மற்றும் பணத்தினை பறித் துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார்.

சிறிது நேரம் அங்கு நின்ற அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்தவர் களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link