Type to search

Headlines

மாவை தலைமையில் தமிழ்க் கட்சிகள் நேற்றும் ஒன்றுகூடி ஆராய்வு

Share

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்றுசேர்ந் துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று தமிழரசுக் கட்சி யின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் ஒன்றுகூடினர்.

இச்சந்திப்பு நேற்று மாலை யாழ்ப்பாணம் நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் இடம் பெற்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோட்டாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது. இதன் காரணமாக தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தன.

இவ்வாறு இணைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில் நாம் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் நேற்று கலந்துரையாடின. மேற்படி கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link