Type to search

Headlines

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

Share

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாவும் போக்கு வரத்து சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்தியாவசிய மற்றும் அவசர கடமைகளுக்கு வர முயற்சிப்போருக்கான விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பொதுப்போக்குவரத்து நடைமுறைகளை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் முன் னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறி னார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுப்போக்குவரத்தை இரண்டு வாரங்களில் வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொதுப்போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்தாலும் கூட பயணிகள் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளது. பேருந்துகள் மற்றும் புகை யிரதங்களில் பயணிக்கும் விதிமுறைகள் எவ்வாறு என்பது குறித்து சுகாதார அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து இப்போது தடுக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமைகளை பொருத்து அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடக்கம் மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியும்.

அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு பொதுப்போக்குவரத்தை முன்னெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் அரச மற்றும் தனியார் அதிகாரிகள் மட்டுமே இப்போது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பேருந்துகளிலும் புகையிரதங்களிலும் குறிப்பிட்ட அளவில் எவரும் வருவதாக பதிவாகவில்லை.

எனவே அத்தியாவசிய கடமைகளில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தம்மை பதிவு செய்துகொண்டு வர முடியும். தனியார் துறையினர் அவ்வாறு மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டுமானால் அதற்கான கோரிக்கையை எமக்கு முன் வைத்தால் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link