மரக்கிளை முறிந்து விழுந்ததில் குழந்தை பலி
Share
வவுனியா கனகராயன்குளம் – ஆயிலடிப் பகுதியில் வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது வீசிய பலத்த காற்றில் வீதிக்கரையில் இருந்த வேப்ப மரத்தின்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,
அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் ஆயிலடிப் பகுதியைச் சேர் ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தையே மரணமடைந்துள்ளதுடன், ஜீவிதா (வயது-10), சர்மிலாதேவி (வயது-8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.