மதுபானசாலைகள் தொடர்ந்து மூடப் பட்டிருக்கும்
Share
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற் பனை நிலையங்கள் திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற மற்றும் தளர்த்தப்படும் சந்தர்ப் பங்களில் எக்காரணம் கொண்டும் மதுபான சாலைகளை திறக்க அனுமதிக்க முடியாது எனவும், சட்டவிரோதமான மது உற்பத்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மதுவரித் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.