மதவாச்சியில் இளைஞர் ஒருவர் குத்திப் படுகொலை
Share

மதவாச்சியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் இடையிலான தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.