மண் மேடு சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
Share
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு – விசுவமடு சந்தியை இணைக்கும் வீதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
பாலத்தின் கட்டுமானப் பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில் கொங்கிரீட் இடும் பணியில் குறித்த குடும்பஸ்தர் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது மண் மேடு சரிந்து விழுந்ததில் கம்பிக்குள் சிக்குண்டு குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவத்தில் முதலாம் யூனிற் தர்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இராசலிங்கம் சசிதரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.