Type to search

Headlines

மணிவண்ணனுக்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது

Share

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்டளை வழங்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீள கையேற்கப்பட்டது.

பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவருடைய கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.

அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

அதனால் வழக்குச் செலவு இன்றி மனுவை மீளப்பெற மனு தாரர் முடிவு செய்துள்ளார் என்று மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார். மணி வண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விடயத்தை நான் அறியவில்லை.

ஆனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையில்லை என்று மணிவண்ணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

அதனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு அனுமதியளித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link