Type to search

Headlines

பொதுத் தேர்தலுக்கான முடிவு இன்று

Share

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா என்பதை தீர்மானிக்கவும் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளவும் இன்று திங்கட்கிழமை சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித் துள்ளார்.

குறித்த சந்திப் பில் தீர்மானம் எடுக் கும்வரை பாராளு மன்ற தேர்தலின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று மகிந்த தேசப் பிரிய தெரிவித்துள் ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது போன்ற பிற விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அல்லது தேர்தல் செயலகத்தின் கீழ் வரவில்லை.

ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். அதுவே அவரின் தனிச்சிறப்பு. தேர்தல்கள் ஆணைக் குழு தேர்தல்களை நடத்துவது மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link