Type to search

Headlines

பெண் நீதவான், 7 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

Share

எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றின் பெண் நீதவான் அவரது உத்தியோகபூர்வ இல் லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீதவானின் கணவர், வெலிசர கடற்படை முகாமில் சேவை யாற்றும் நிலையில் கடந்தவாரம் அவர் எம்பிலிபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கிருந்தமை தெரியவந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

நீதவானின் கணவருக்கு கொரோனா இருப்பது இதுவரை உறுதியாகாத போதும், அவர் வெலிசர முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை அந்த அதிகாரி, எம்பிலிபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனது மனைவி யான நீதவானுடன் ஒன்றாக தங்கிருந்துள்ளமையால் நீதவானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நீதிமன்ற நடவடிக் கைகளுடன் தொடர்புபட்ட, நீதவானின் பாதுகாப்புக்கு என இருந்த உத்தியோகத்தர் உள்ளிட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கே உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link