புலனாய்வு அதிகாரி சடலமாக மீட்பு
Share
வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் நேற்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக் காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக்காட்டு பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறு வதாக நேற்று முன்தினம் மாலை இராணுவ உள்ளக புலனாய்வாளர்களுக்கு இரகசியமாகக் கிடைக்கப் பெற்ற தகவலை யடுத்து அங்கு விரைந்த இராணுவ உள வுத்துறை அதிகாரி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரைத் தேடி அப்பகு திக்குச் சென்ற ஏனைய உளவுத்துறை அதிகாரிகளால் நேற்று அதிகாலை குறித்த இராணுவ அதிகாரி வீட்டுக் கிணறு ஒன்றி லிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ உளவுத்துறை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக் காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி தேடுதலின்போது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தாரா? அல்லது திட்டமிட்ட கொலையா? என பல்வேறு கோணங்களில் வவுனியா பொலிஸாரும் இராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.