Type to search

Headlines

நீதியரசர் விக்னேஸ்வரனே தமிழ் மக்களுக்கு கிடைத்த தலாய்லாமா

Share

நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கி­ம். நாம் அவரை நமக்குக் கிடைத்துள்ள தலாய்லாமாவாக (திபெத்தின் ஆன்மீகத் தலைவர்) பார்க்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து இணையவழி மூலமான பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எப்படி தலைமையை உருவாக்க வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை யூட்டக் கூடிய குறியீட்டுத் தலைவன் தேவை. அத்தகைய குறியீட்டுத் தலைவன் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆவார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் நம்பி எதுவும் நடக்கவில்லை. நமக்கு புதிய ஒரு மாற்று அரசியல் வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க நாம் நீதியரசர் விக்னேஸ்வரனை ஆதரிக்க வேண்டும்.

திபெத்துக்கு கிடைத்த தலாய்லாமா போன்று விக்னேஸ்வரனை நாம் பார்க்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் தமிழ்ப் பற்றாளருமான மு.திரு நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link