Type to search

Headlines

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு

Share

நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் மீது நேற்று வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தே. நடேசு (வயது- 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர் தனது கடமையை முடித்துக் கொண்டு சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளானார்.

தாக்குதலுக்கு இலக்கான இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link