நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களில் தீர்த்தம் வடிகின்றது
Share

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து தீர்த்தம் போன்ற திரவம் சுரந்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபி ஷேகம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இவ் அதிசயச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே தீர்த்தம் போன்ற திரவம் வடிந்துள்ளது.
இதனை அறிந்த பெருமளவான பொது மக்கள் ஆலயத்துக்குச் சென்று தீர்த்தம் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் சென்றனர்.