தேர்தல் ஓகஸ்ட் உத்தியோகபூர்வமான திகதி இன்று அறிவிக்கப்படும்
Share

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் உத்தியோகபூர்வமான திகதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதி மன்றால் நேற்று மாலை கட்டளை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் பின்னர் இன்று பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.