Type to search

Headlines

துண்டாடப்பட்ட கை யாழ்.போதனாவில் இணைப்பு

Share

வட மாகாணத்தில் முதல் முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி அன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொதுமக்கள் கைகள், கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடைய வேண்டும்.
அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்க முடியாது போகக் கூடும்.

இது பல சிக்கலான சிகிச்சை முறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினரே இதனை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link