திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு 20 ஆவது திருத்தச் சட்டம்சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
Share
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள யோசனைகயில் உள்ள யோசனைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் அதனை சபைக்கு அறிவிப்பார். இதன் பின்னர் தேவையான நேரத்தில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை விவாதத்திற்கு எடுக்க முடியும்.
இரண்டாம் முறை வாசிப்பின் போது திருத்தங்களை உள்ளடக்க முடியும். விவாதம் நடத்தப்படுவது, எத்தனை நாட்கள் விவாதம் நடத்தப்படும் என்பன கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினால் தீர்மானிக்கப்படும்.
தேவை என கருதும் அனைத்து திருத்தங்களும் புதிய வரைபில் சேர்க்கப்பட்டு, சட்டமாக்கப்படும்.இதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் தேவை இருக்காது எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.