தனிமைப்படுத்தலில் இருந்த பெண் வவுனியாவில் மரணம்
Share
வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.
வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9 ஆம் திகதி வருகைதந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. அவர்கள் தாயாருடன் வசித்து வந்த நிலையில் தாயார் நேற் றைய தினம் உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய மரண விசாரணையின்போது குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட் டிருந்தபோதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12 ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.