சீரற்ற காலநிலை சில தினங்கள் தொடரும்
Share
நாட்டின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தளம் பல்நிலை காரணமாக ஆரம்பித்துள்ள சீரற்ற காலநிலை சில தினங்களுக்குத் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறு வனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் சீத்தா வாக்கை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் பலிந்தனுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகத் திற்குட்பட்ட பகுதிகளுக்கும் காலி மாவட்டத்தில் அல்பிட்டிய, நாகொட மற்றும் நியா கம ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.