கொரோனா பேரலை விரைவில் மீண்டும் உச்சமாக தாக்கும்
Share
உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலைதான்.
ஆனால் கொரோனாவின் மிகப்பெரிய அலை மீண்டும் விரைவில் உச்சமாக தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரொனா தொற்று மிகவும் பாரிய உலக சுகாதார அவசரகால நிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் எபோலா, ஸிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் தொற்றின்போது பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலையை விட இது பாரதூரமானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் ரெட்ரோஸ் அதனம் தெரிவித் துள்ளார்.
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சமூக இடை வெளியை பேண வேண்டும் என்பதுடன், முகக்கவசங்களை அணிவது போன்ற சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.