கொரோனா உயிரிழப்பு 7 ஆக உயர்வானது
Share

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான நபரே நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென் றுள்ளனர்.