கொரோனா அச்சம் மன்னார் ரயில் நிலையம் மூடல்
Share
மன்னார் பிரதான புகையிரத நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத் திலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கொரோனா சந்தேகநபர் ஒருவர் தப்பித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மன்னார் சௌத்பார் பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் குறித்த நபர் நடமாடித் திரிந் ததையடுத்து மன்னார் பிரதான புகையிரத நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் புகையிரதங்களும் தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை புகையிரத நிலையம்மேற்கொண்டு ள்ளது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் புகையிரத நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், புகையிரத நிலைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் புகையிரத நிலைய பகுதிகளைச் சூழ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.