கொரோனாவால் 13 ஆவது மரணம்
Share
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் இருந்து செப்ரெம்பர் 2 அன்று நாடு திரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.