கெரோயினுடன் ஒருவர் கைது
Share

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் 32 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
இதில் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.