கம்பஹா பொது வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Share
கம்பஹா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் அண்மையில், கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளரை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்தே பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.