கஜேந்திரகுமாரின் யோசனை சபாநாயகரால் நிராகரிப்பு
Share
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த யோசனை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்திய நிலையில், சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் பிரதி வாதத்தை முன்வைத்ததால் சபையில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட் டளை 27{2 இன் கீழான விசேட கூற்றின் பிரகாரம் தியாக தீபம் திலீபனின் நினை வேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் விசேட பிரேரணையொன்றை முன்வைத்தார்.
எனினும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில் இதனை நிராகரித் ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது.
சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்து கொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப் பாய்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சபையில் முன்வைத்தார். “கஜேந்திரகுமார் பொன் னம்பலம் கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27{2 இன் விசேட கூற்றை என் னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன்.
ஏனென்றால் இதில் மூன்றாம் பந்தி யில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்கு டன் தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 இற்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது.
அதுமட்டுமல்ல பாராளுமன்ற நடை முறை நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சகல கட்சித் தலைவர்களும் நிலையியல் கட்டளை 27{2 இற்கு அமைய ஒரு நாளில் ஒரேயொரு சமூக அவசரகால அல்லது முக்கியத்துவம் என கருதும் கேள்வியை மாத்திரமே கொண்டுவர முடியும் என்ற வரையறையும் நடை முறைப்படுத்தப்படுகின்றது என்ற அறிவிப்பை அறியத் தருகின்றேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க, சபாநாயகரின் தீர்மானத்தை நிராகரித்து கருத்து வெளியிட்டார்.