Type to search

Headlines

எதிர்வரும் இரு வாரங்கள் அவதானமாக இருக்க வேண்டும்

Share

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக சமூகத்தில் பரவாத போதிலும் எதிர்வரும் இரண்டுவாரங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நோய் அறிகுறிகள் தென்படாத நோய் தொற்றாளி ஒருவரினால், நோய் தொற்று மற்றவர்களுக்கு தொற்றக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே மக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களிலும் மிகுந்த அவதானத்துடன் சமூக இடை வெளி உள்ளிட்ட சுகாதார வழி முறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link