Type to search

Headlines

எங்கள் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்

Share

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் கள் எங்கள் போராட்டத்திற்கும் கவலைகள், கண்ணீருக்கும் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளாகிய நாங்கள் இத்தேர்தல் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடு கின்ற வேட்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியையும், உண்மைத் தன்மையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தேர்தல் பிரசாரங்களை முன் வைத்து வாக்குறுதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த செயற்பாடுகள் அரசிற்கு ஓர் அழுத்தத்தை கொடுப்பதாக இருந்தாலும், இப் பிரசார வாக்குறுதிகள் வெறுமனே தேர்தலில் வாக்குகளை சுவீகரிப்பதற்காக மட்டும் அல்லாது எமது உறவுகளின் ஏக்கங்களையும்,காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளையும் கணவனையும் பறிகொடுத்து நிற்கும் எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான வாக்கு றுதிகளாக அமைய வேண்டும்.

தேர்தலின் பின்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கான நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும். அரசிற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நீதியுடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் இவர்கள் சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்@ர் பொறிமுறை களுடாகவோ பாதிக்கப்பட்ட எமக்கு சார்பாக நின்று நீதிக்கான நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும்.

வெறுமனே இவ் வாக்குறுதிகள் காற்றில் பறக்காமல் எங்களுக்கு ஓர் நியாயமான தீர்வை பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம்.

ஆகவே எங்கள் போராட்டத்திற்கும் கவலைகள், கண்ணீருக்கும் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link