ஊரடங்கு இன்று தளர்கிறது நேற்று மட்டும் 17 பேர் கொரோனாவால் பாதிப்பு
Share

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (ஏப்ரல் 19) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்
என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 256ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
91 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
158 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.