உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி
Share
மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் இருந்து பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து சில்லினுள் சிக்குண்டு பலியானார்.
இச்சம்பவம் நேற்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் சங்கானை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் (வயது – 36) என்பவரே பலியானார்.
மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதுண்டதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.