இறந்தவர்களின் உடலை வடக்குக்கு கொண்டுவர அனுமதி பெற வேண்டும்
Share
வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத் திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
குறித்த அனுமதியை வழங்குவதற் காக இறந்தவரின் விபரங்கள், இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலை அல்லது இடம் போன்ற விபரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டதா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே அனுமதி வழங்கப்படும் என ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் உடல் மின்சார தகன இயந்திரத்திலேயே எரியூட்டப்பட வேண்டும் எனவும், உடலம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஆகக் கூடியது 3 மணித்தியாலம் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ள ஆ.கேதீஸ்வரன், குடும்பத்தினர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்குபற்றலாம் எனவும் அவர் கள் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.