இரண்டு பவுண் சங்கிலி அறுப்பு
Share
ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணொருவரின் 2 பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையரினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிகாமம் இராமாவில் பகுதியில் பிற்பகல் 1.30 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராமாவில் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிஷேக நிகழ்வுக்கு சென்று விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்மணியினை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.