இனப்பிரச்சினையை சமஷ்டி முறையில் தீர்க்க மகிந்தவுக்கு பொன்னான வாய்ப்பு
Share

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
அதனை தவறவிட்டுவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.