அரசுடன் இணைந்து செயலாற்ற வடக்கு பிரதிநிதிகள் முன்வர வேண்டும்
Share
அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர் களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கல்வியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசியல் மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல.
தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்றும், தமிழர்களின் குரல் என்றும், தமிழ் மக்கள் சார்ந்த தீர்மானங் களை எடுப்பதற்குத் தங்களிடமே அதிகாரம் இருப்பதாகவும் கூட்டமைப்பு இது வரை பாராளுமன்றத்தில் கூறிவந்தது. எனினும் இனி அவ்வாறு அவர்களுக்கு கூறமுடியாது.
இன்று வேறு சில தலைவர்களும் வடக்கிலிருந்து தெரிவாகியுள்ளனர். விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், அங்கஜன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தமிழ் மக்கள் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுத்துள்ளனர்.
வடக்கில் கல்வி சார்ந்த ஆவல் அதி கரித்திருக்கிறது. அரசாங்கம் பாரபட்சம் காட்டாது. அனைவருடைய ஆதரவும் அரசாங்கத்திற்கு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.