Type to search

Headlines

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன்

Share

என்னை ஒருபோதும் அரசியல் அழுத்தங்களால் அடிபணிய வைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.

அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அதற்கு அடிபணிபவன் நான் அல்லன் என்பதும் அனைவருக்கும் தெரியும். நான் என்ன செய்வேன் என்பது
எவருக்கும் தெரியாது. அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் என்னிடம் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைவரிடமும் நான் ஒரே மாதிரியாகவே பழகுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இந்தக் காலப்பகுதியில் தங்களுக்கு அரசியல் ரீதியில் ஏதேனும் அழுத் தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவொரு இரகசிய சந்திப்புகளையும் நடத்தவில்லை எனவும், ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் உரிமை தனக்கு இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் உள்ளகப் பிரச்சினைகள் இருக்கின்றனவா என எழுப்பப் பட்ட கேள்விக்கு, அவ்வாறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று மகிந்த தேசப்பிரிய பதிலளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link