அமெரிக்க தூதுவருடன் பிரதமர் மகிந்த ஆலோசனை
Share
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி ஆகிய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவரு டன் பிரதமர் மகிந்த கலந்துரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது,
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப் பொன்று இடம்பெற்றதுடன், இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்தல் மற்றும் அதன் பின்னரான பொருளாதார ரீதியான சவாலை எதிர் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலை குறித்துக் கருத்து வெளியிட்ட டெப்லிட்ஸ் ‘தற்போது பொது சுகாதாரத்துறை மேம்பாடு அடைந்திருப்பதாகவே நம்புகின் றோம். அது தொடரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட தன் பின்னர், நாட்டின் ஆடை உற்பத்தித் துறையின் மேம்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பிரதமர், தற்போது நாட்டின் முன்னணி ஆடையுற்பத்தி நிறுவனங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு அங்கி உற்பத்திகளில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் பல்தேசியக் கம்பனிகள் மற்றும் சிறிய, நடுத்தர வணிக முயற்சிகள் இந்நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதைக் காண அமெரிக்கா விரும்புவ தாகவும் தெரிவித்தார்.
மேலும் இருநாடுகளிலும் எதிர்வரவுள்ள தேர்தல் தொடர்பிலும் இருவரும் கலந்துரை யாடியதுடன், நிலுவையிலுள்ள இருநாடுகளும் தொடர்புபட்ட திட்டங்களை சுமூக நிலை திரும்பியதும் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டது.