Type to search

Headlines

அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்

Share

உங்களது உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர் தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் விடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது உண்மையில் மக்கள் இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை.

நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எம்மைப் பொறு த்தவரைக்கும் ஏற்கெனவே சுகாதார நடை முறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப் பார்த் திருக்கிறோம்.

தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில் வாக்களிப்பின் போது கொரோனா தொற்றுஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே இருக்கும்.

அதாவது நீங்கள் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது தங்களுடைய அன்றாட கடமைகளை செய்யும்போதோ கொரோனா தோற்று ஏற்படுகின்ற வாய்ப்பை விட வாக்களிப்பு நிலையத்திற்குள் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு மிகவும்குறை வாகவே காணப்படுகின்றது

அத்தோடு நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்லும் போது மாஸ்க் அணிந்து கைகளை கழுவி ஏனையோர் பாவித்த பேனைகளை பாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம்.

வீதிகளில் நடமாடும் போது ஏற்படும் தொற்றுக்குரிய வாய்ப்பினை விட வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் குறைவானது.

எனவே உங்களுக்குரிய வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link