Type to search

Headlines

அங்கஜனை அமைச்சராக்கி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம்

Share

அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி அவரைப்பலப்படுத்தி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என கருத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றாகத் தெரியும், அப்படி கூறினால் இனவாதத்தை இலகுவாகத் தூண்டிவிட முடியும் என்று.
எம்மைப் பொறுத்தவரை யாழில் இருந்து வந்த சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கும் கிழக்கிலிருந்து வந்த அதாவுல்லா போன்றோருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும்.

இதுதான் எமது நிலைப்பாடாகும். இதுதான் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வழிமுறைகளாகும்.

நாம் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொள்ளும்போதுதான் அனைத்து சமூகங்களும் முன்னேற்றமடையும்.

அப்போது மட்டும்தான், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனின் இனவாத அரசியலுக்கும் தேவை ஏற்படாது போகும். இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக இந்த நாடு மேலும் பலமடையும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link