Type to search

Headlines

விக்னேஸ்வரனின் உரை ஹன்சார்ட்டில் இணைப்பு

Share

தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற கன்னி உரை ஹன்சார்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார்.

இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து ஆராய்வதாக குறித்த தினமே சப நாயகர் மகிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தபோதும் விக்னேஸ்வரனின் உரையின் விவரிக்கப்படாத பதிப்பு நாடாளுமன்றத்தின் ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link