Type to search

Headlines

வவுனியாவில் விபத்து மாணவன் உயிரிழப்பு

Share

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த எ.புவிதன் (வயது – 14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link