வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
Share

வல்வெட்டித்துறைப்பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொள்ளையடித்த பெருமளவு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளை சேர்ந்த 23, 24 மற்றும் 26 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களினால் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கிய குற்றச்சாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச் சாட்டில் அண்மையில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் போதைவஸ்து பாவித்து விட்டு கொள்ளையில் ஈடுபடுகின்ற நபர்கள் பற்றி அம்பலத்துக்கு வந்ததாகவும் இதனைத் தொடர்ந்து மேலும் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையடிக் கப்பட்ட நகைகள், உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
அதன் பெறுமதி சுமார் 10 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர கைத்தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள், ஐபாட், தொலைபேசி மீள் நிரப்பு அட்டை மற்றும் தொலைக்காட்சி என் பனவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.