வடக்கில் விசேட கவனம்
Share
பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இம் முறை விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர் களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை வரையிலான மதசார் விடுமுறை நாட்களை காரணம் காட்டி விகாரைகள் உள்ளிட்ட ஏனைய மதஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரசாரத்தின் போதான ஊடக அறிக்கையிடல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
எந்தவகையான ஊடகங்களும் எதிர்வரும் 3ஆம் 4ஆம் திகதிகளில் விளம்பரமோ அல்லது ஊக்கமளிக்கும் விடயங்களையோ பிரசுரிக்க முடியாது.
இருப்பினும் வடக்கு மாகாணத்தில் இம்முறை விசேட கவனம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.