வடக்கில் இன்று முதல் கடும் மழைபெய்யலாம்
Share
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்று முதல் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்காக அந்தமான் கடற்பிராந்தியத்தை இணைந்ததாக இன்று வியாழக்கிழமை முதல் தாழமுக்க பிராந்தியம் உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
இதனால் நாட்டில் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யும், இதன்போது இடி, மின்னலு டன் பலத்த காற்றும் வீசும் சாத்தியமுள்ள தால் பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் என்றார்.