Type to search

Headlines

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை

Share

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் இசைத் துறை விரிவுரையாளருமான கண்ணதாசன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள் ளார்.

வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை இரத்துச் செய்து அவரை விடுதலை செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்;று கட்டளை வழங்கியது.

இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு கண்ணதாசனால் மேன் முறையீடு செய்யப்பட்டு, எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதி மன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும் என அன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் குமார் ரட்ணம் விண்ணப்பத்தை முன்வைத்தார்.

ஏற்கெனவே இடம்பெற்ற விசாரணையை நியாயப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்ட தன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருக்கவில்லை.

அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்து வருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக வழக்கு நேற்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு, குறித்த கட்டளையை வழங்கியது.

கண்ணதாசன் குற்றவாளியாகக் காணப் பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண் டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை வழக்கிலி ருந்து விடுவித்து, விடுதலை செய்து கட்டளை வழங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் முன்னாள் பொறுப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறை விரிவுரையாளருமான கண்ணதாசனுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
அந்த வழக்கில் கண்ணதாசனை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link