Type to search

Headlines

யாழ்.நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

Share

புட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ நேற்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.

யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் மாவீரர் தினத்திற்கு தடைகோரி பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது, யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரினார்.

நேற்றைய வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து, எந்த இன மக்களின் உணவு பழக்கவழக்கங்களை அல்லது நம்பிக்கைகளை கொச் சைப்படுத்தும் விதமாக இருந்தால் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார் என அறிவித்தார்.

இதன்போது எழுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ பகிரங்க மன்னிப்பு கோரினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link