யாழ்ப்பாண குடாநாடு எந்நேரமும் முடக்கப்படலாம்
Share
யாழ்ப்பாண குடாநாடு எந்நேரமும் முடக்கப்படலாம். பொது மக்கள் அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ.மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி நேற்று அவசரமாக கூடியது.குறித்த கூட்டத்திலேயே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டால் எதிர்வரும் நாட்களில் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும்.
சில பிரதேசங்களை முடக்க வேண்டிய தேவையும் ஏற்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.